உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / தூத்துக்குடி மாவட்ட கவுன்சிலர் பதவி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்ட கவுன்சிலர் பதவி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் புதிய முகங்களுக்கு அதிக வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் பதிவிக்கு திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை திமுக தலைவர் கருணாநிதி உத்தரவின் பேரில் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பெரியசாமி அறிவித்துள்ளார். போட்டியிடும் வேட்பாளர்கள் விபரம்: 1வது வார்டு இளங்கோ, 2வது வார்டு வித்யாசாகர், 4வது வார்டு இந்திரகாசி, 5வது வார்டு மகாராஜன், 6வது வார்டு லலிதா என்ற வேலம்மாள், 7வது வார்டு தங்ககுமாரி, 8வது வார்டு மந்திரம், 9வது வார்டு பிளவேந்திரராஜ், 10து வார்டு கனகலட்சுமி, 11வது வார்டு உமாதேவி, 12வது வார்டு பெருமாள்அம்மாள், 13வது வார்டு சாந்தகுமாரி, 14வது வார்டு விஜயபாஸ்கரன், 15வது வார்டு சுதா, 16வது வார்டு ரவீந்திரன், 17வது வார்டு வசந்தம் ஆர்.கிருஷ்ணமூர்த்தி. தூத்துக்குடி மாவட்ட திமுக கவுன்சிலர் வேட்பாளர் பட்டியலில் 90 சதவீதத்திற்கு மேல் புது முகங்களுக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. தற்போது வெளியாகியுள்ள பட்டியல் படி 2 வேட்பாளர்கள் மட்டும் பழையவர்கள் என்பது குறிப்பிடதக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை