உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / பொதுமக்களை ஏமாற்றி வீட்டுமனை விற்றால் உரிமையாளர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை

பொதுமக்களை ஏமாற்றி வீட்டுமனை விற்றால் உரிமையாளர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை

தூத்துக்குடி : பொதுமக்களை ஏமாற்றி வீட்டுமனை விற்பனை செய்பவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் ஆஷிஷ்குமார் எச்சரித்துள்ளார். மாவட்ட கலெக்டர் ஆஷிஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது; மாவட்டத்திலுள்ள கிராம பஞ்சாயத்து எல்கைக்குட்பட்ட பகுதிகளில் நகர்புற ஊரமைப்புத் துறை அனுமதியும், கிராம பஞ்சாயத்தின் அனுமதியும் பெறப்படாமல் முறையற்ற வகையில் வீட்டுமனைப்பிரிவுகள் சிலரால் அமைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது எனத் தெரிய வருகிறது. வீட்டுமனை பிரிவு செய்து விற்பனை செய்யும் முன் அரசாணை எண்.255 ஊரக வளர்ச்சித்துறை நாள் 18-8-1997ல் தெரிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகள் வீட்டுமனைப்பிரிவு அமைப்பவர்களாலும் சில பஞ்சாயத்து தலைவர்களாலும் கடைபிடிக்கப்படுவதில்லை. எனவே, முறையான அனுமதி பெறப்படாத மனைப்பிரிவுகளில் கட்டப்படும் வீடுகளுக்கு பஞ்சாயத்தால் கட்டட வரைபட அனுமதி வழங்கப்பட மாட்டாது என்ற விவரமும், மேற்படி இடங்களுக்கு குடிநீர், ரோடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் பஞ்சாயத்தால் செய்து கொடுக்க இயலாது.

மேலும், வீட்டுமனைகள் வாங்கும்போது நகர்ப்புற ஊரமைப்புத்துறை அனுமதியும், பஞ்சாயத்தின் முறையான அனுமதியும் பெறப்பட்ட வீட்டுமனைப்பிரிவு இடங்களில் உள்ள வீட்டுமனையா? பஞ்சாயத்து பொதுக்காரியங்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்கள் எதுவும் உள்ளனவா? என்பது போன்ற விபரங்களை சரிபார்த்து அதன் பின்னர் வீட்டுமனைகளை பொதுமக்கள் பதிவு செய்து கொள்ள வேண்டும். பொதுக்காரியங்களுக்காக ஒதுக்கபடும் 10 சதவீத இடத்தினையும், பாதைக்காக ஒதுக்கீடு செய்யும் இடத்தினையும் பஞ்சாயத்திற்கு தானமாக எழுதிக் கொடுக்காமல் அதனையும் சில பஞ்சாயத்து தலைவர்களின் உதவியோடு பொதுமக்களை ஏமாற்றி சில நில உடமையாளர்கள் விற்பனை செய்து விடுவதால் பொதுமக்கள் வீட்டுமனை வாங்கும் போது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். மேலும் உரிய மனைப்பிரிவு அனுமதி பெறாமல் வீட்டுமனை விற்பனை செய்பவர்கள் மீதும், பொது இடங்களை விற்பனை செய்பவர்கள் மீதும் சட்டப்படியான கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கலெக்டர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ