உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / வரப்பு தகராறில் அடிதடி : தந்தை மகன் உட்பட 4 பேர் கைது

வரப்பு தகராறில் அடிதடி : தந்தை மகன் உட்பட 4 பேர் கைது

கோவில்பட்டி : கோவில்பட்டி அருகே வரப்பு தகராறில் ஏற்பட்ட அடிதடி வழக்கில் தந்தை மகன்கள் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது, கோவில்பட்டி அருகேயுள்ள ஆலம்பட்டியை சேர்ந்த அழகர்சாமி மகன் கிருஷ்ணசாமி(43). இதே ஊரை சேர்ந்த காளியப்பன் மகன் கந்தசாமி(55). இருவருக்கும் அருகருகே நிலம் உள்ளதால் வரப்பு தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் தகராறு முற்றி கைகலப்பு ஏற்பட்டதில் கந்தசாமி, அவரது மகன்கள் முனியசாமி(35), பெருமாள்சாமி (26), கருப்பசாமி(24) ஆகிய நான்கு பேரும் சேர்ந்து கிருஷ்ணசாமியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கிருஷ்ணசாமி கோவில்பட்டி மேற்கு போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்ததின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் வழக்கு பதிவு செய்து கந்தசாமி அவரது மகன்கள் பெருமாள்சாமி, முனியசாமி, கருப்பசாமி ஆகிய நான்கு பேரையும் கைது செய்து விசாரணை செய்து வருகிறார். காயமடைந்த கிருஷ்ணசாமி கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை