உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / அண்ணா பல்கலைக்கழக தர வரிசையில் நேஷனல் இன்ஜி., கல்லூரி சாதனை

அண்ணா பல்கலைக்கழக தர வரிசையில் நேஷனல் இன்ஜி., கல்லூரி சாதனை

கோவில்பட்டி : திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழக தரவரிசையில் கோவில்பட்டி நேஷனல் இன்ஜி., கல்லூரி இரண்டாம் இடம் பெற்று சாதனை படைத்தது.இதுகுறித்து கோவில்பட்டி நேஷனல் இன்ஜி., கல்லூரி இயக்குநர் சொக்கலிங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;திருநெல்வேலி அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் கீழ் தமிழகத்தின் தென் மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 73 இன்ஜி., கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பல்லைக் கழகத்தின் சார்பில் கடந்த 2010 நவம்பர் மற்றும் டிசம்பர் மாத பல்கலைக்கழக தேர்வு எழுதிய மாணவர்கள் தேர்ச்சி பெற்றதன் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது.இதில் கோவில்பட்டி நேஷனல் இன்ஜி., கல்லூரி இரண்டாவது இடத்தை பெற்று சாதனை படைத்தது. பல்கலைக் கழக அளவில் இரண்டாமிடம் என்ற சிறப்பைப்பெற உழைத்த இயக்குநர் சொக்கலிங்கம், முதல்வர் சுப்புராஜ், பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவ மாணவிகளை கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் கேஆர் கல்லூரிகளின் நிர்வாக இயக்குநர் அருணாச்சலம் பாராட்டினார். தொடர்ந்து 2011-12 கல்வியாண்டு முதல் புதுடெல்லி பல்கலைக்கழக மானியக்குழு, தமிழக அரசு மற்றும் நெல்லை அண்ணா தொழில்நுட்ப பல்லைக்கழகம் ஆகியவற்றால் நேஷனல் இன்ஜி., கல்லூரிக்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்கப்பட்டு, திருநெல்வேலி அண்ணா தொழி ல்நுட்ப பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது என கோவில்பட்டி நேஷனல் இன்ஜி., கல்லூரி இயக்குநர் சொக்கலிங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை