உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / விவசாயிகள் விழிப்புணர்வு கூட்டம்

விவசாயிகள் விழிப்புணர்வு கூட்டம்

கோவில்பட்டி : கோவில்பட்டி உழவர்சந்தையில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.கோவில்பட்டி உழவர்சந்தையில் விவசாயிகளும் - நுகர்வோர்களும் உழவர்சந்தையினை மேம்படுத்துவதற்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் வேளாண்மை அலுவலர் சந்தை நிர்வாக அலுவலர் பொன்ராஜ் வரவேற்றார். தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் முருகவேல் விவசாயிகள் குழுக்களாக ஒன்றுசேர்ந்து தங்களது காய்கறிகளை நல்ல விலையில் விற்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். தோட்டக்கலை உதவி இயக்குநர் ராஜ்குமார் பேசும்போது தரமான காய்கறிகள் உற்பத்தி செய்ய தொழில்நுட்பங்கள் மற்றும் ரகங்கள் வாரியாக காய்கறி சாகுபடி செய்ய வேண்டும் என கூறினார். கூட்டுறவு இணைப் பதிவாளர், விவசாயிகளுக்கு கடன் உதவித் திட்டத்தினை கூறினார். வேளாண்மை அலுவலர் பாலமுருகன், திட்டப்பணிகளை கூறினார். தோட்டக்கலை சார்பாக விவசாயிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது. தூத்துக்குடி வேளாண்மை அலுவலர் ராஜா நன்றி கூறினார்.கூட்டத்தில் சத்துணவு அலுவலர், துணை வட்டார வளர்ச்சி சத்துணவு மற்றும் மந்தித்தோப்பு, தேவர்குளம், தோணுகால் சேர்ந்த விவசாயிகள் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள் வெள்ளைப்பாண்டி, மதன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர்கள், ரேவதி மற்றும் வெங்கிட சுப்பிரமணியன் ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை