உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / பனிமய மாதா பேராலயத்தில் நற்கருணை பவனி பல்லாயிரக்கணக்கான பங்கு இறைமக்கள் பங்கேற்பு

பனிமய மாதா பேராலயத்தில் நற்கருணை பவனி பல்லாயிரக்கணக்கான பங்கு இறைமக்கள் பங்கேற்பு

தூத்துக்குடி : தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய பெருவிழாவில் நேற்று நற்கருணை பவனி நடந்தது. இந்த பவனியில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.திவ்ய சந்தமரிய தஸ்நேவிஸ் மாதா என்றழைக்கப்படும் தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தின் 429வது ஆண்டு பெருவிழா 26ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவ ங்கி நடந்து வருகிறது. பெருவிழாவை முன்னிட்டு தினந்தோறும் பங்கு இறைமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள், முதியோர், மாற்றுத்திறனாளிகள், பனை தொழிலாளர்கள், மீன்பிடித் தொழிலாளர்கள், கப்பல் மாலுமி, இளைஞர்கள், செபக்குழுக்கள் உட்பட பல்வேறு பிரிவினருக்காக சிறப்பு திருப்பலிகளும், இரவில் மறையுரையும் நடந்து வருகிறது.

விழாவின் 6ம் நாள் நிகழ்வாக நேற்று புதுநன்மை மற்றும் நற்கருணை பவனி விழா நடந்தது. நேற்று காலை 6.30 மணிக்கு பங்கின் மரியாயின் சேனை, பிரான்சிஸ்கன் 3ம் சபை, இளைஞர்கள், இளம்பெண்கள், மறைகல்வி மா ணாக்கர் மற்றும் திருச்சிலுவை செபக்குழுவினருக்கான திருப்பலி நடந்தது. 7.30 மணிக்கு பிஷப் இவோன் அம்புரோஸ் தலைமையில் புதுநன்மை திருப்பலி நடந்தது. 9 மணிக்கு ஸ்டேட் பாங்க் காலனி பங்கு இறைமக்களுக்காக சிறப்பு திருப்பலி நடந்தது. 10ம ணிக்கு மலையாளத்திலும் 11 மணிக்கு ஆங்கிலத் திருப்பலியும் நடந்தது. மாலை 5.15 மணிக்கு துறைமுக பங்கு இறைமக்களுக்கான திருப்பலி நடந்தது. 6.15 மணிக்கு பிஷப் இவோன் அம்புரோஸ் தலைமையில் செபமாலை, நற்கருணை பவனி, மறையுரை மற்றும் நற்கருணை ஆசீரும் நடந்தது. நற்கருணை பவனியில் பல்லாயிரக்கணக்கான பங்கு இறைமக்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர். இரவில் நற்கருணை இறை பிரசன்னத்தின் உச்ச அனுபவம் என்ற தலைப்பில் மதுரை தூய பேதுரு குருமடத்தை சேர்ந்த மரிய அந்தோணி மறையுரையாற்றினார். இன்று மறைமாவட்ட ஆசன ஆலய பங்கு இறைமக்கள், திரேஸ்புரம் பங்கு இறைமக்கள், சலேசிய துறவிகள், டி.சவேரியார்புரம் பங்கு இறைமக்கள்,நற்செய்தி பணியாளர்கள் மற்றும் சமூக பணியாளர்களுக்கான சிறப்பு திருப்பலி நடக்கிறது. இரவில் மதுரை மறைமாவட்டத்தை சேர்ந்த இயேசு கருணா 'அன்னை இறைவார்த்தையின் சாட்சி' என்ற தலைப்பில் மறையுரையாற்றுகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை