உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / நாகலாபுரத்தில் தமுஎகச கூட்டம்

நாகலாபுரத்தில் தமுஎகச கூட்டம்

தூத்துக்குடி : தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 8வது மாவட்ட மாநாடு நாகலாபுரத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்டம் முழுவதிலிருந்து கிளைகளின் பிரதிநிதிகளாக 37 பேர் கலந்து கொண்டனர். சிவசூரியன், முருகன் மற்றும் கணேசன் ஆகிய மூவர் அடங்கிய தலைமைக்குழு மாநாட்டை நடத்தியது. மாவட்ட தலைவர் அப்பாக்குட்டி வரவேற்றார். சங்கத்தின் மாநில துணைத் தலைவர் உதயசங்கர் பேசினார். மாவட்ட செயலர் முருகன், செயலர் அறிக்கையை தாக்கல் செய்தார். மாவட்ட பொருளாளர் சாம்பசிவன் வரவு-செலவு கணக்கு சமர்ப்பித்தார். 25 பேர்களைக் கொண்ட புதிய மாவட்டக் குழு தேர்வு செய்யப்பட்டது. புதிய மாவட்ட குழு கூடி மாவட்ட தலைவராக அப்பாக்குட்டியையும், மாவட்ட செயலாளராக ஆனந்தனையும், பொருளாளராக சாம்பசிவனையும் தேர்வு செய்தது. மாவட்ட துணைத் தலைவர்களாக முருகன், உதயசங்கர் ஆகியோரும், துணைச் செயலாளராக ராமசுப்பு மற்றும் சேகர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் 11 பேர்கள் கொண்ட செயற்குழுவும் தேர்வு செய்யப்பட்டது. மாநில செயலர் லட்சுமி காந்தன் பேசினார். மாவட்ட பொருளாளர் சாம்பசிவன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்