மேலும் செய்திகள்
குலசையில் தசரா விழா கோலாகலம்
03-Oct-2025
சென்னை போலீஸ்காரர் கோவில்பட்டியில் தற்கொலை
03-Oct-2025
மாஜி போலீஸ்காரருக்கு சிறை
28-Sep-2025
கப்பலில் இருந்து விழுந்தவர் பலி
27-Sep-2025
ஏரல் : சிறுத்தொண்டநல்லூர் முத்துமாலை அம்மன் கோயில் கொடை விழா இன்று நடக்கிறது. ஏரல் அருகேயுள்ள சிறுத்தொண்டநல்லூர் முத்துமாலை அம்மனுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் இரண்டாம் செவ்வாய்கிழமை அன்று கொடை விழா நடக்கிறது. இந்த ஆண்டு கொடை விழா இன்று நடக்கிறது. மதியம் 12 மணிக்கு அம்மன் சந்தனகாப்பு தரிசனம், சிறப்பு பூஜையை தொடர்ந்து அன்னதானம், இரவு 9 மணிக்கு முளைப்பாரி, மா விளக்கு எடுத்தல், கயிறுசுற்றி ஆடுதல், இரவு 12 மணிக்கு புஷ்ப அலங்கார தரிசனம், சிறப்பு பூஜை நடக்கிறது. தொடர்ந்து வாணம், மத்தாப்பு, வேடிக்கை சிறப்பு சிங்காரி மேளங்களுடன் கற்பக பொன் சப்பரத்தில் அம்மன் நகர்உலா செல்லும் நிகழ்ச்சிகள் நடக்கிறது. நாளை (31ம் தேதி) காலை 8 மணிக்கு உலா சென்ற அம்மன் கோயில் வந்து அமர்தல், 9 மணிக்கு அம்மனுக்கு பொங்கலிடுதல், மதியம் சிறப்பு பூஜை, இரவு 9 மணிக்கு இன்னிசை கச்சேரி மற்றும் நகைச்சுவை நிகழ்ச்சி நடக்கிறது. கொடை விழா ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்துள்ளனர்.
03-Oct-2025
03-Oct-2025
28-Sep-2025
27-Sep-2025