உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / இன்று தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் 500 நாய்களுக்கு கு.க ஆபரேஷனுக்கு அதிரடி

இன்று தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் 500 நாய்களுக்கு கு.க ஆபரேஷனுக்கு அதிரடி

தூத்துக்குடி : தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் இன்று நடக்கிறது. 500 நாய்களுக்கு கு.க ஆபரேஷன் செய்வதற்கு தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. மேட்டுப்பட்டியில் மேலும் ஒரு எரிவாயு தகன மேடை, இரண்டு இடங்களில் ஆடு அடிக்கும் இடம் அமைக்கவும் தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்படுகிறது. தூத்துக்குடி மாநகராட்சி அவசர கூட்டம் இன்று காலை 11 மணிக்கு மேயர் கஸ்தூரிதங்கம் தலைமையில் நடக்கிறது. கமிஷனர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், இன்ஜினியர் ராஜகோபாலன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். மாநகராட்சி அதிகாரிகள், கவுன்சிலர்கள் கலந்து கொள்கின்றனர். மாநகராட்சியின் பதவி காலம் முடியும் நேரத்தில் நடக்கும் இந்த அவசர கூட்டத்தில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடக்காத தெருக்களில் பணிகள் மேற்கொள்ளவும், மாநகராட்சியுடன் இணைந்துள்ள ஐந்து பஞ்சாயத்து பகுதியில் இந்த திட்டத்தை செயல்படுத்தவும் தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்படுகிறது. தூத்துக்குடி மாநகராட்சி சிதம்பரநகர் மையவாடியில் ஏற்கனவே ஒரு எரிவாயு தகன மேடை செயல்பட்டு வருகிறது. இதே போல் திரேஸ்புரம் (மேட்டுப்பட்டி) மையவாடியில் ஒரு எரிவாயு தகன மேடை புதியதாக அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக 51 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த மதிப்பீடு தொகை இன்றைய கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. இதில் அரசு மானியமாக 20 லட்சத்தை பெறவும், மீதித் தொகை 31 லட்சத்து 25 ஆயிரத்தை மாநகராட்சி பொதுநிதியில் இருந்து செலவு செய்யவும் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. தூத்துக்குடி மாநகராட்சியில் தற்போது புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே நவீன ஆடு அடிக்கும் இடம் செயல்பட்டு வருகிறது. சென்னை நகராட்சி நிர்வாக ஆணையர் உத்தரவுப்படி மேலும் இரண்டு இடங்களில் ஆடு அடிக்கும் இடம் அமைக்க ஏற்பாடு செய்து அறிக்கை அனுப்புமாறு தெரிவித்துள்ளார். இதன்படி தூத்துக்குடி எஸ்.எஸ். பிள்ளை மார்கெட்டில் ஒன்றும், ஜார்ஜ் ரோட்டில் அமைந்துள்ள மீனவர் அங்கன்வாடியில் ஒன்றும் மொத்தம் இரண்டு ஆடு, அடிக்கம் இடம் அமைக்க 40 லட்சத்தில் அமைக்க மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. மதிப்பீடு தொகையினை அங்கீகரிக்கவும் இந்த தொகையினை மானியமாக பெற்று பணிகள் செய்யவும் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. இன்னும் பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்படுகிறது. பதவி முடிவதற்கு முன்பாக இன்னும் ஒரு மாநகராட்சி கூட்டம் நடக்க வாய்ப்பு உள்ளது. அந்த கூட்டத்தில் சேர்க்க வேண்டிய பொருள் குறித்து டிஸ்கஸ் நடந்து வருவதாக மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை