உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / நடுக்கடலில் பலத்த சூறாவளி காற்று விசைபடகுகள் பாதியில் கரை திருப்பின

நடுக்கடலில் பலத்த சூறாவளி காற்று விசைபடகுகள் பாதியில் கரை திருப்பின

தூத்துக்குடி : நடுக்கடலில் வீசிய பலத்த சூறாவளி காற்று காரணமாக மீன்பிடிக்க சென்ற விசைபடகுகள் எல்லாம் பாதி வழியில் கரைக்கு திரும்பின. தூத்துக்குடி மீன்பிடித்துறைமுகத்தை மையமாக கொண்டு சுமார் 250 விசைபடகுகள் இயங்கி வருகிறது. இந்த விசைபடகுகள் அனைத்தும் அதிகாலையில் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றுவிட்டு இரவில் கரைக்கு திரும்பும். நேற்று காலை வழக்கம்போல் தூத்துக்குடி மீன்பிடித்துறைமுகத்தில் இருந்து விசைபடகுகள் கடலுக்குள் மீன்பிடிப்பதற்காக புறப்பட்டு சென்றன. கரையில் இருந்து சுமார் 6 கடல் மைல் தொலைவிற்கு விசைபடகுகள் சென்ற போது கடலுக்குள் பலத்த சூறாவளி காற்று வீசியது. இதனால் விசைபடகுகளால் மேலும் கடலுக்குள் செல்ல முடியவி ல்லை. இதனை தொ டர்ந்து விசைபடகில் சென்றவர்கள் மீன்பிடிக்க முடியாமல் மீன்பிடித்துறை முகத்திற் கு திரும்பி வந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை