| ADDED : ஆக 29, 2011 11:22 PM
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டார ரேஷன் கடைகளில் பறக்கும் படை குழுவினர் ஆய்வு செய்தனர். தூத்துக்குடி மண்டல இணைப்பதிவாளர் உத்தரவின்படி தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டாரத்திலுள்ள ரேஷன் கடைகளில் பறக்கும் படை ஆய்வு குழுவினர் ஆய்வு செய்தனர். ஆய்வின்போது அத்தியாவசியப் பொருட்களான அரிசி, சீனி, கோதுமை, மண்ணெண்ணெய், சிறப்பு பொது விநியோகத்திட்ட பொருட்களான துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, சமையல் எண்ணெய், செறிவூட்டப்பட்ட கோதுமை மாவு, ரவை, மைதா மற்றும் ரூ.50 மதிப்பிலான மளிகைப் பொருட்களில் இருப்பு குறைவு ஏற்படுத்தியது, போலி பில் மூலம் விற்பனை செய்தது மற்றும் நிர்ணயித்த அளவினைக் காட்டிலும் கூடுதலாகவும், பொதுவிநியோகத்திட்ட பொருட்களை முறைகேடான வகையில் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் முறைகேடுகள் புரிந்த விற்பனையாளர்களிடமிருந்து ரூ.27 ஆயிரத்து 123 அபராததொகை வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தகவலை தூத்துக்குடி கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார்.