மேலும் செய்திகள்
குலசையில் தசரா விழா கோலாகலம்
03-Oct-2025
சென்னை போலீஸ்காரர் கோவில்பட்டியில் தற்கொலை
03-Oct-2025
மாஜி போலீஸ்காரருக்கு சிறை
28-Sep-2025
கப்பலில் இருந்து விழுந்தவர் பலி
27-Sep-2025
ஏரல் : உமரிக்காடு முத்தாரம்மன் கோயில் கொடை விழா கோலாகலமாக நடந்தது. ஏரல் அருகேயுள்ள உமரிக்காடு முத்தாரம்மன் கோயில் கொடை விழா நிகழ்ச்சிகள் கடந்த 26ம் தேதி முதல் ஆரம்பமானது. கடந்த 26,27ம் தேதிகளில் அம்மனுக்கு தீபாராதனை மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தது. 28ம் தேதி இரவு தீபாராதனையும், 29ம் தேதி காலை மதியம், அன்னதானம் மற்றும் இரவு மாக்காப்பு தீபாராதனை நடந்தது. 30ம் தேதி அம்மனுக்கு கொடை விழா நடந்தது. கொடை விழா நிகழ்ச்சியாக காலை அம்மன் அபிஷேகத்திற்கு தாமிரபரணி கடல் சங்கு முகம் சென்று புண்ணிய தீர்த்தம் கொண்டு வருதல், மாலை அம்மன் அபிஷேகத்திற்கு தாமிரபரணி ஆற்றிலிருந்து புண்ணிய தீர்த்தம் கொண்டு வருதல், சிங்காரி மேளம், இரவு தீபாராதனை, தொடர்ந்து ஸ்ரீமன் நாராயண சுவாமிக்கு பொங்கலிடுதல், அதைத் தொடர்ந்து மா விளக்கு, கயிறு சுற்றி ஆடுதல், ஆயிரம் கண்பானை, முளைப்பாரி எடுத்தல், நேமிசம் கொண்டு வருதல், இரவு அம்மன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி ஊர் வீதிகளில் பவனி வந்து அருள் புரிதல், வாண வேடிக்கை ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. கொடை விழாவில் சென்னை, மும்பை, கோவை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் மற்றும் உமரிக்காடு பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து சென்றனர். விழாவை முன்னிட்டு உமரிக்காடு ஊர் முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது. நேற்று காலை அம்மனுக்கு மஞ்சள் பால் பொங்கலிடுதல், ஊர் மக்கள் பொங்கலிடுதல், மதியம் தீபாராதனை நடந்தது. இன்று இரவு 8 மணிக்கு சென்னை வாழ் உமரி மாநகர் நாடார் நலச்சங்கம் சார்பில் சென்னை கலைஞர்கள் வழங்கும் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடக்கிறது. கொடை விழா ஏற்பாடுகளை கிராம விவசாயிகள் சங்கத்தலைவர் கந்தப்பழம் தலைமையில் நிர்வாகஸ்தர்கள் பிரபாகரன், கிருஷ்ணன், சிங்கராஜ், கணேசன், ஆகியோர் செய்திருந்தனர்.
03-Oct-2025
03-Oct-2025
28-Sep-2025
27-Sep-2025