உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / தென்மண்டல ஐ.ஜி., தூத்துக்குடியில் திடீர் விசிட்

தென்மண்டல ஐ.ஜி., தூத்துக்குடியில் திடீர் விசிட்

தூத்துக்குடி : மதுரை தென்மண்டல ஐ.ஜி.,ராஜேஷ்தாஸ் திடீரென மாவட்டத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் ஆய்வு மேற்கொண்டார். சென்னை புறநகர் கமிஷனராக இருந்த ராஜேஷ்தாஸ் தென்மண்டல ஐ.ஜி.,யாக சில தினங்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து தென் மண்டலங்களில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் திடீர் ஆய்வு செய்து வருகிறார். இந்நிலையில் மதுரையில் இருந்து காரில் வந்த ஐ.ஜி.,ராஜேஷ்தாஸ் தூத்துக்குடி மாவட்டத்திற்கு வந்தார். மாவட்டத்தில் உள்ள மாசார்பட்டி, எட்டயபுரம், தருவைகுளம் போன்ற போலீஸ் ஸ்டேஷனில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் ஏ.எஸ்.பி.,சோனல் சந்திரா, எஸ்.பி., நரேந்திரநாயர் மற்றும் டி.எஸ்.பி.,க்கள், ஏ.டி.எஸ்.பி.,க்கள், தனிப் பிரிவு எஸ்.பி., இன்ஸ்பெக்டர் அனில்குமார் உட்பட்ட போலீசாரிடம் அவர் ஆலோசனை நடத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை