மேலும் செய்திகள்
குலசையில் தசரா விழா கோலாகலம்
03-Oct-2025
சென்னை போலீஸ்காரர் கோவில்பட்டியில் தற்கொலை
03-Oct-2025
மாஜி போலீஸ்காரருக்கு சிறை
28-Sep-2025
கப்பலில் இருந்து விழுந்தவர் பலி
27-Sep-2025
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் நடத்திய வாகன சோதனையில் ஒரே நாளில் 303 பேர் மீது போக்குவரத்து விதியை மீறி வாகனம் ஓட்டியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது; தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 303 பேர் மீது போலீசார் போக்குவரத்து விதியை மீறியதாக வழக்குப்பதிவு செய்தனர். இதன்படி டூவீலரில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 33 பேர் மீதும், 3 பேருக்கு மேல் வாகனம் ஓட்டியதாக 21 பேர் மீதும், லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டியதாக 96 பேர் மீதும், செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டியதாக 22 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். தூத்துக்குடி டவுனில் பலரும் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்காமல் வாகனம் ஓட்டி வருகின்றனர். எனவே மாவட்ட எஸ்.பி., தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
03-Oct-2025
03-Oct-2025
28-Sep-2025
27-Sep-2025