உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / அரசு கேபிள் டிவி ஒளிபரப்பு தூத்துக்குடியில் இன்று துவக்கம்

அரசு கேபிள் டிவி ஒளிபரப்பு தூத்துக்குடியில் இன்று துவக்கம்

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட அரசு கேபிள் டிவி ஒளிபரப்பு துவக்க விழா இன்று நடக்கிறது. தமிழகத்தில் அரசு கேபிள் டிவி ஒலிபரப்பு இன்று துவக்கப்படும் என்றும் 90 சேனல்கள் அதில் இடம் பெறும். மாத கட்டணம் 70 ரூபாய் என்று முதல்வர் ஜெ., அறிவித்தார். அரசு கேபிள் டிவி இன்று ஒளிபரப்பு ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.அரசு கேபிள் டிவி ஒளிபரப்பை இன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் முதல்வர் ஜெ., தொடங்கி வைக்கிறார். தூத்துக்குடி மாவட்டத்தில் கலெக்டர் ஆஷீஷ்குமார் காலை 12.30 மணி க்கு அரசு கேபிள் டிவி ஒளிபரப்பை துவக்கி வைக்கிறார் என்று பி.ஆர்.ஓ சுரேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை