மேலும் செய்திகள்
குலசையில் தசரா விழா கோலாகலம்
03-Oct-2025
சென்னை போலீஸ்காரர் கோவில்பட்டியில் தற்கொலை
03-Oct-2025
மாஜி போலீஸ்காரருக்கு சிறை
28-Sep-2025
கப்பலில் இருந்து விழுந்தவர் பலி
27-Sep-2025
எட்டயபுரம் : எட்டயபுரம் அருகே சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர் கைதுசெய்யப்பட்டனர். இதில் கணவனை போலீசார் தேடிவருகின்றனர். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது: எட்டயபுரம் அருகேயுள்ள கீழஈராலை சேர்ந்தவர் கடற்கரை. இவரது மகன் முத்துவீரன்(24). கூலித்தொழிலாளியான இவருக்கும் அதே தெருவைச் சேர்ந்த அழகர்சாமி மகள் காளீஸ்வரி(17) என்பவருக்கும் பெற்றோர்கள் சம்மத்துடன் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. திருமணம் நடக்கும்போது காளீஸ்வரிக்கு வயது 15 என்று கூறப்படுகிறது. திருமணம் முடிந்து கணவன் மனைவி ஒன்றாகத்தான் வாழ்ந்துவந்துள்ளனர். இந்நிலையில் இவர்களுக்குள் தற்பொழுது குடும்ப பிரச்னை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பிரச்னையில் 15 வயதில் சிறுமிக்கு திருமணம் நடந்ததாக அங்குள்ள விஏஓவுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து விஏஓ எட்டயபுரம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார். எட்டயபுரம் போலீசார் குழந்தை திருமணம் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து காளீஸ்வரியின் தந்தையான அழகர்சாமி(39), தாய் குருவம்மாள்(35) ஆகியோரை கைது செய்தனர். இதனை அறிந்த கணவர் முத்துவீரன் தப்பிஓடிவிட்டார். அவரை போலீசார் தேடிவருகின்றனர்.
03-Oct-2025
03-Oct-2025
28-Sep-2025
27-Sep-2025