மேலும் செய்திகள்
குலசையில் தசரா விழா கோலாகலம்
03-Oct-2025
சென்னை போலீஸ்காரர் கோவில்பட்டியில் தற்கொலை
03-Oct-2025
மாஜி போலீஸ்காரருக்கு சிறை
28-Sep-2025
கப்பலில் இருந்து விழுந்தவர் பலி
27-Sep-2025
கோவில்பட்டி : கோவில்பட்டியில் பயங்கரவாத ஒழிப்பு உறுதிமொழி பேரணி நடந்தது.கோவில்பட்டி காங்., தேசிய பேரவையின் சார்பில் பயங்கரவாத ஒழிப்பு உறுதிமொழி பேரணி மற்றும் கருடா இளைஞர் பாசறையின் பிரசார பயண விளக்க கருத்தரங்கம் நடந்தது. கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். மாவட்ட காங்.,பொதுச் செயலாளர் முத்து, வீரப்பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மகேஷ்குமார் வரவேற்றார். தொடர்ந்து பயங்கரவாத ஒழிப்பு உறுதிமொழி பேரணிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பயங்கரவாத ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த கருடா இளைஞர் நலப்பாசறை சார்பில் கடந்த 15ம் தேதி சென்னையில் பேரணி துவங்கியது. தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு நகரங்கள் வழியாக சென்று சுமார் 25 லட்சம் பேரிடம் பயங்கவாத ஒழிப்பு கையெழுத்து வாங்கியபடி சென்று, வரும் 16ம் தேதி மத்திய அமைச்சர் சிதம்பரம் பிறந்த நாளன்று சென்னையில் காங்.,பொதுச் செயலாளர் ராகுல்காந்தியிடம் சேர்க்கப்படுகிறது. மேலும் பிரசார பயண விளக்க கருத்தரங்கு நடந்தது. காங்.,தேசிய பேரவை கோவில்பட்டி சட்டசபை தொகுதி அமைப்பாளர் ராஜசேகரன் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் எஸ்.சி.,எஸ்.டி.,பிரிவு தலைவர் சின்னப்பன், காங்.,தேசிய பேரவை காமராஜ், சண்முகவேல், சண்முகராஜ், சந்திரமோகன், பொன்னுச்சாமி, ராஜேந்திரன், காளியப்பன், அய்யனார், சித்தரசு, ராமசாமி, மாநில பேச்சாளர் அரியமுத்துபாரதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
03-Oct-2025
03-Oct-2025
28-Sep-2025
27-Sep-2025