மேலும் செய்திகள்
விபத்தில் 2 வாலிபர்கள் இறப்பு
04-Oct-2025
குலசையில் தசரா விழா கோலாகலம்
03-Oct-2025
சென்னை போலீஸ்காரர் கோவில்பட்டியில் தற்கொலை
03-Oct-2025
மாஜி போலீஸ்காரருக்கு சிறை
28-Sep-2025
கப்பலில் இருந்து விழுந்தவர் பலி
27-Sep-2025
தூத்துக்குடி : வ.உ.சிதம்பரனாரின் தன்மான கனவினை நிறைவு செய்யும் வகையில் தூத்துக்குடி-கொழும்பு இடையே பயணிகள் கப்பல் சேவை அமைந்துள்ளதாக துறைமுக சபைத் தலைவர் சுப்பையா புகழாரம் சூட்டினார்.தூத்துக்குடி வஉசி., துறைமுக பொறுப்புக் கழகம் சார்பில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 139வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு துறைமுக வளாகத்தில் உள்ள வஉசி., திருவுருவ சிலைக்கு துறைமுக பொறுப்பு கழகத் தலைவர் சுப்பையா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் நடந்த பிறந்தநாள் விழாவிற்கு துறைமுக சபைத் தலைவர் சுப்பையா தலைமை வகித்தார். வஉசி., பிறந்தநாள் விழாக்குழுத் தலைவர் நடராஜன் வரவேற்றார். தொழிற்சங்க நிர்வாகிகள் லசல், பரமசிவம், செல்வக்குமார், நக்கீரன், தொழில் வர்த்தக சபையின் துணைத் தலைவர் பொன்வெங்கடேஷ் ஆகியோர் பேசினர். வஉசி.,யின் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இடையே நடந்த பேச்சு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி துறைமுக சபைத் தலைவர் பேசும் போது, 1906ம் ஆண்டு தூத்துக்குடியில் இருந்து வஉசி., இரண்டு சுதேசி கப்பல்களை கொழும்புவிற்கு அனுப்பி வைத்தார். ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட கப்பல் சேவை பல தொல்லைகள் காரணமாக முடக்கி வைக்கப்பட்டது. வஉசி.,யால் ஆரம்பிக்கப்பட்ட நிறுத்தப்பட்ட கப்பல் சேவை இந்தாண்டு ஜூலை13ம் தேதி மீண்டும் தூத்துக்குடியில் இருந்து தொடங்கி வைக்கப்பட்டது. இதன் மூலம் வஉசி.,யின் தன்மானக் கனவு நிறைவு பெற்றுள்ளளது. தூத்துக்குடி-கொழும்பு இடையே பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்பட்டுள்ள வஉசி.,க்கு பெருமையும், சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் அமைந்துள்ளது. சிறிய மீன்பிடித் துறைமுகமாக இருந்து தூத்துக்குடி துறைமுகம் தற்போது 24 மில்லியன் டன் கொள்ளளவு கையாளும் திறனை பெற்றுள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் அது 100 மில்லியன் டன்களாக உயரும். அப்போது தான் வஉசி.,யின் கனவு முழுமையாக நிறைவு பெறும். அதற்காக நாம் பாடுபட வேண்டும். வஉசி., கப்பல் சேவையை தொடங்குவதற்காக பல்வேறு கஷ்டங்களை அனுபவித்தார். கப்பல்களை வாங்குவதற்காக வெளியூர்களுக்கும் சென்றார். தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் அமைக்கும் பணி முனைப்போடு நடந்து வருகிறது. இதற்காக மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சகம் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. துறைமுகத்திற்கு புதிய நிர்வாக அலுவலகம், நுழைவு வாயில், வஉசி., நினைவகம் கட்டும் பணிகள் இந்தாண்டிற்குள் தொடங்கப்படும். இந்தாண்டு போல் இனிவரும் நாட்களிலும் வஉசி.,யின் பிறந்த நாள் விழா துறைமுக சபை சார்பில் சிறப்பாக கொண்டாடப்படும் என்றார். விழாவில் துறைமுக சபை அதிகாரிகள், உபயோகிப்பாளர்கள், ஊழியர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். தூத்துக்குடி துறைமுகத்திற்கு வஉசி.,யின் பெயர் சூட்டப்பட்ட பின்னர் கொண்டாடப்பட்ட முதல் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று து றைமுகத்தை பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டனர். ஏராளமான பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் துறைமுகத்தின் உள்பகுதியை சுற்றி பார்த்தனர்.
04-Oct-2025
03-Oct-2025
03-Oct-2025
28-Sep-2025
27-Sep-2025