உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / தாமிரபரணி தண்ணீர் மூலம் மோசடி 13ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதம்

தாமிரபரணி தண்ணீர் மூலம் மோசடி 13ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதம்

தூத்துக்குடி : தாமிரபரணி தண்ணீரை எடுத்து 3500 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறது. தாமிரபரணி வடகால், தென்கால் விவசாயிகளைப் பாதுகாக்கவும், தாமிரபரணி தண்ணீரை எடுத்து 3 ஆயிரத்து 500 கோடிக்கு மேலாக மோசடி செய்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அரசு ஆணைப்படி மணிமுத்தாறு தண்ணீரை உடனே தூத்துக்குடி மாவட்டக் குளங்களுக்கு திறந்துவிட வலியுறுத்தியும் தாமிரபரணி பாசன விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் நயினார் குலசேகரன் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் நல்லையா ஆகியோர் வரும் 13ம் தேதி காலை 10 மணியில் இருந்து தூத்துக்குடி ராஜாஜி பூங்கா முன்பு காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்க உள்ளனர். உண்ணாவிரதப் போராட்டத்தை கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தொடங்கி வைக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை