உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / உடன்குடியில் தகராறு ஒருவர் காயம், ஒருவர் கைது

உடன்குடியில் தகராறு ஒருவர் காயம், ஒருவர் கைது

உடன்குடி : உடன்குடியில் பந்தல் போடுவதில் ஏற்பட்ட தகராறில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. இது சம்பந்தமாக ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது, உடன்குடி வில்லிகுடியிருப்பைச் சேர்ந்த முருகன் மகன் ஆனந்தராஜ்(32). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த மாடசாமி மகன் சின்னக்கண்ணனுக்கும் பந்தல் போடுவதில் முன்விரோதம் இருந்ததாக தெரிகிறது. சம்பவத்தன்று இருவருக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டு ஒருவருக்கு ஒருவர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து குலசேகரன்பட்டணம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சின்னக்கண்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ