உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / உடன்குடி டவுன் பஞ்.,வளர்ச்சிக்கு ரூ.7 கோடி நிதி ஒதுக்க வேண்டும் : டவுன் பஞ்., தலைவர் கோரிக்கை

உடன்குடி டவுன் பஞ்.,வளர்ச்சிக்கு ரூ.7 கோடி நிதி ஒதுக்க வேண்டும் : டவுன் பஞ்., தலைவர் கோரிக்கை

உடன்குடி : உடன்குடி டவுன் பஞ்.,ன் வளர்ச்சி பணிகளுக்காக ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தமிழக உள்ளாட்சி துறை அமைச்சரை டவுன் பஞ்.,தலைவர் சாகுல்ஹமீது நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளார். உடன்குடி டவுன் பஞ்.,பகுதியில் ஜவஹர்லால் நேரு தேசிய நகர்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த குடிசை மேம்பாட்டு திட்டத்தில் குடிசை பகுதியிலுள்ள ஏழை எளிய மக்களுக்கு குறைந்தபட்சம் 200 இலவச வீடுகள் கட்டுவதற்கு ரூ.3.60 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும், ரோடுகள் அமைப்பதற்கு நகர்புற சாலை உள்கட்டமைப்பு திட்டத்தில் ரூ.40 லட்சமும், வளர்ச்சி பணிகள் மேற்கொள்வதற்கு இயக்கம் மற்றும் பராமரிப்பு திட்டத்தில் ரூ.65 லட்சமும், குடிநீர் வசதிக்காக மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் கட்டுவதற்கும் மற்றும் அடிப்படை வசதிகள் செய்வதற்கும், பகுதி 2 திட்டத்தில் ரூ.43 லட்சமும், சுடுகாடு இடுகாடு மேம்பாடு திட்டத்தில் மயான மேம்பாட்டு பணிகளுக்கு ரூ.48 லட்சமும், ஏற்கனவே கட்டப்பட்டு முற்றிலும் பழுதடைந்த அழிவுற்ற 30 ஆதிதிராவிட குடியிருப்புகளை புனரமைப்பு செய்திட ரூ.54 லட்சமும், பகுதி பழுதடைந்த 50 வீடுகளை பழுது நீக்கம் செய்திட ரூ.10 லட்சமும், உடன்குடி டவுன் பஞ்.,பகுதியில் கழிப்பிட வசதி இல்லாத நலிவுற்ற ஏழை மக்களின் வீடுகளுக்கு புதிய கழிப்பிடங்கள் கட்டுவதற்கு குறைந்த செலவிலான சுகாதார திட்டத்தின் கீழ் ரூ.60 லட்சமும், புதிய தெருவிளக்குகள் அமைக்க ரூ.20 லட்சமும் என மொத்தம் ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உடன்குடி டவுன் பஞ்.,பகுதியின் வளர்ச்சிப் பணிகளுக்கு உதவிட வேண்டும் என தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் முனுசாமியை உடன்குடி டவுன் பஞ்.,தலைவர் சாகுல்ஹமீது நேரில் சந்தித்து மனு கொடுத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை