மேலும் செய்திகள்
குலசையில் தசரா விழா கோலாகலம்
03-Oct-2025
சென்னை போலீஸ்காரர் கோவில்பட்டியில் தற்கொலை
03-Oct-2025
மாஜி போலீஸ்காரருக்கு சிறை
28-Sep-2025
கப்பலில் இருந்து விழுந்தவர் பலி
27-Sep-2025
ஸ்ரீவைகுண்டம் : ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோயிலில் உண்டியல் உடைத்து நள்ளிரவில் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது: நவதிருப்பதிகளில் முதல் திருப்பதியும், பூலோகத்தின் வைகுண்டம் என பெயர் பெற்ற ஸ்தலமுமான ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோயிலில் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமிதரிசனம் செய்கின்றனர். ஸ்ரீவைகுண்டம் நகரின் பிரதான பகுதியில் அமைந்துள்ள இக்கோயிலை சுற்றிலும் மதில்சுவரும், 50 அடி உயர பிரம்மாண்ட கதவும் உள்ளது. நேற்று முன்தினம் இரவு பூஜைகள் முடிந்து கதவை சாத்திவிட்டு சென்றுள்ளனர். நேற்று காலை கோயிலை திறந்தபோது கோயிலின் இரண்டாம் நிலை பிரகாரம் வாயில் முன்பு உள்ள உண்டியலும், வேணுகோபால் சந்நிதி அருகேஉள்ள உண்டியலும், திருவேங்கடமுடையான் டாலரும் உடைக்கப்பட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதனால் அதி ர்ச்சியடைந்த கோயில்ஊ ழியர்கள்,அர்ச்சகர்கள் உடனடியாக ஸ்ரீவைகுண்டம் போலீசாருக்கு தகவல் கொ டுத்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி.,ஸ்டீபன்ஜேசுபாதம், இன்ஸ்பெக்டர் அருள்முருகன், சப்இன்ஸ்பெக்டர்கள் சேக், முத்தையா, ஆகியோர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மோப்பநாய் டெய்சிவரவழைக்கப்பட்டது. மோப்பநாய் சிறிது தூரம் ஓடிசென்றது.யாரையும் பிடிக்கவில்லை. உண்டியலில் சுமார் ரூ.20 ஆயிரம் இருந்திருக்கலாம் என்று கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவ இடத்தை துணை ஆணையர் வீரராஜன், நிர்வாக அதிகாரி ராமசுப்பிரமணியன், இன்ஸ்பெக்டர் பாலு, ஸ்தலத்தார்கள் வெங்கிடாச்சாரி, ஸ்ரீனிவாசன் ஆகியோர் பார்வையிட்டனர். மேலும் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடிவருகின்றனர். நகரின் மத்தியில் அமைந்துள்ள பெருமாள் கோயிலில் உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
03-Oct-2025
03-Oct-2025
28-Sep-2025
27-Sep-2025