உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / தூத்துக்குடி மாநகராட்சியில் 20 ஆண்டாக தூர்ந்து போன கழிவுநீர் கால்வாய் சீரமைப்பு

தூத்துக்குடி மாநகராட்சியில் 20 ஆண்டாக தூர்ந்து போன கழிவுநீர் கால்வாய் சீரமைப்பு

தூத்துக்குடி : தூத்துக்குடி மாநகராட்சியில் மழைகால முன்னேற்பாட்டிற்காக 20 ஆண்டுகளுக்கு மேலாக தூர்ந்து போய் கிடந்த கழிவு நீர் ஓடை கடும் சிரமத்துடன் மாநகராட்சி மூலம் சீர் செய்யப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாநகராட்சியில் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கி பெரும் பிரச்னையை உருவாக்கி வந்தது. வரும் மழைக்காலத்தில் மாநகராட்சி பகுதியில் எந்த ஒரு இடத்திலும் தண்ணீர் தேங்காமல் சீராக பக்கிள் ஓடைக்கு செல்லும் வகையில் திட்டங்களை மாநகராட்சி செயல்படுத்தி வருகிறது. பெரும்பாலான முக்கிய ரோடுகளிலும், தெருக்களிலும் ரோட்டின் இருபுறமும் வாறுகால் வசதி இல்லாமல் இருந்தது. தற்போது வாறுகால் அமைக்கும் பணிகள் பல இடங்களில் நடந்து முடிந்துள்ளது. சில இடங்களில் நடந்து வருகிறது. ரோடு போடும் இடங்கள் அனைத்திலும் ரோட்டின் இருபுறமும் வாறுகால் அமைத்த பிறகு தான் ரோடு போட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. மாநகராட்சி பகுதியில் கடந்த சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக மாவட்ட விளையாட்டு அரங்கை ஒட்டியுள்ள கழிவுநீர் செல்லும் பெரிய கால்வாய் தூர்ந்து போய் கிடந்தது. வி.இ ரோடு, ஜார்ஸ் ரோடு இரண்டு ரோட்டிற்கும் இடையே இந்த கால்வாய் செல்கிறது. ஆனால் இந்த கால்வாய் தூர்ந்தும், அதனை கிளீன் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. தற்பொழுது மாநகராட்சி பொதுநிதியில் இருந்து செயின் ஜெ.சி.பி உள்ளே இறக்கப்பட்டு 20 ஆண்டு கால கழிவுகள் அனைத்தும் தோண்டி எடுக்கப்படுகிறது. ஜெ.சி.பி செல்லாத இடங்களில் தனியார் துப்புரவு பணியாளர்கள் உள்ளே இறங்கி பணிகளை செய்து வருகின்றனர். இன்னும் சுமார் ஒரு வார காலம் தொடர்ச்சியாக இங்கு பணிகள் நடக்கும் என்று கூறப்படுகிறது.இந்த பணிகள் முழுமையாக முடிந்து விட்டால் மழைக் காலத்தில் தூத்துக்குடியில் எந்த இடத்திலும் தண்ணீர் தேங்காது. பெரிய அளவில் நடந்து வரும் இந்த பணியை நேற்று மேயர் கஸ்தூரிதங்கம், கமிஷனர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகியோர் பார்வையிட்டனர். இன்ஜினியர் ராஜகோபால், இளநிலை பொறியாளர்கள் சரவணன், ஆகியோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ