மேலும் செய்திகள்
குலசையில் தசரா விழா கோலாகலம்
03-Oct-2025
சென்னை போலீஸ்காரர் கோவில்பட்டியில் தற்கொலை
03-Oct-2025
மாஜி போலீஸ்காரருக்கு சிறை
28-Sep-2025
கப்பலில் இருந்து விழுந்தவர் பலி
27-Sep-2025
தூத்துக்குடி : ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த முதல்வர் ஜெ., உடனடியாக உத்தரவிட வேண்டும் என்று தூத்துக்குடியில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் சுப்பையா தெரிவித்தார்.தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக பயிற்சி பட்டறை மற்றும் மாவட்ட பொதுக்குழு கூட்டம் தூத்துக்குடி மாவட்ட தலைவர் வடிவேல் தலைமையில் நடந்தது. மாநில மகளிர் பிரிவு செயலாளர் லீலாவதி, மாநில துணைத் தலைவர் சிந்தாமதார் பக்கீர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சேகர் வரவேற்றார். மாநில தலைவர் சுப்பையா, மாநில பொதுச் செயலாளர் விஜயக்குமார், உயர்நிலை மேல்நிலைப்பள்ளி ஆசிரியர், அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு முருகன், பொருளாளர் பாலகணேசன் ஆகியோர் பேசினர். மாவட்ட அமைப்பு செயலாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார். கூட்டத்திற்கு வந்த மாநில தலைவர் சுப்பையா நிருபர்களிடம் கூறியதாவது; தமிழகத்தில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முதல்வர் ஜெ.,ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்புவதாக அறிவித்திருப்பதை பாராட்டி வரவேற்கிறோம். தொடர்ந்து நடந்து வரும் ஆசிரியர் கவுன்சிலிங்கை விடாமல் நடத்த வேண்டும். விரைவில் இதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும். தமிழாசிரியர் பணியிடங்களை நிரப்ப கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அரசாணை எண் 720ல் திருத்தம் செய்ய அமைக்கப்பட்ட ஜெகநாதன் கமிட்டியின் அறிக்கையை அரசு உடனே வெளியிட வேண்டும். முறையான பதவி உயர்வை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும்.அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளபடி பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த முதல்வர் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மாநில தலைவர் தெரிவித்தார்.
03-Oct-2025
03-Oct-2025
28-Sep-2025
27-Sep-2025