உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / புனித மரியன்னை கல்லூரியில் கருத்தரங்கு

புனித மரியன்னை கல்லூரியில் கருத்தரங்கு

தூத்துக்குடி : புனித மரியன்னைக் கல்லூரியின் பொருளாதாரத் துறை வைர விழாவை முன்னிட்டு பொருளாதார பட்டதாரிகளுக்கான தொழில் முனைவு வழிகாட்டுதல் குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கு நடந்தது. கருத்தரங்கின் துவக்க விழாவில் மரியன்னை கல்லூரி முதல்வர் டெக்லா தலைமை வகித்தார். அபி குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் பொன்சீலன் துவக்கி வைத்து பேசினார். தமிழ்நாடு பொருளாதார வல்லுநர்கள் கூட்டமைப்பின் செயலர் சூரியகுமார் பேசினார். தூத்துக்குடி தென்பிராந்திய பட்டய கணக்காளர் சங்கத் தலைவர் தணிக்கையாளர் பொன்பாண்டி இன்பரசு வாழ்த்தி பேசினார். கருத்தரங்கில் தொழில் முனைவோருக்கான ஊக்கத் தொகைகளும், மானியங்களும் என்ற தலைப்பில் மதுரை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தெய்வமணி சிறுதொழில் துவங்குவதற்கான வழிமுறைகள் குறித்தும், காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகத்திலிருந்து பேராசிரியர் சௌந்திரபாண்டியன், பெண் சக்திக்கான திறவுகோல் தொழில் முனைவு என்ற தலைப்பில் ஆந்திரபிரதேசம் காக்காட்டியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் விஜயா, நிதியுதவி பெறுவதற்கான சிறந்த கடவுச்சீட்டு சிறப்பாக முறைப்படுத்தப்பட்ட தொழில் முனைவு திட்டம் என்ற தலைப்பில் தூத்துக்குடி மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜெயராமன், பொருளாதார பட்டதாரிகளுக்கான தொழில் முனைவு வாய்ப்புகள் குறித்து பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரியை சேர்ந்த பேராசிரியர் அகஸ்டின் தொழில் நிறுவனங்களுக்கு உதவும் நிறுவனங்கள் என்ற தலைப்பில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் சாலமன்ராஜ் ஆகியோர் பேசினர். கருத்தரங்கின் நிறைவு விழாவில் மரியன்னைக் கல்லூரி செயலர் ரோஸ்லின் தலைமையில் திருநெல்வேலி தஷ்ணமாற மகாஜன நாடார் சங்க கல்லூரியின் முதல்வர் பழனி நிறைவுரை வழங்கினார். கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை பொருளாதாரத் துறையைச் சேர்ந்த பேராசிரியைகளும், மாணவிகளும் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி