உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / குற்றாலத்தில் நாய் கண்காட்சி

குற்றாலத்தில் நாய் கண்காட்சி

குற்றாலம்:குற்றாலத்தில் நடந்த நாய் கண்காட்சியில் பாளை.,டாக்டரின் வளர்ப்பு நாய்க்கு முதல் பரிசு கிடைத்தது.குற்றாலத்தில் கடந்த 23ம் தேதி சாரல் திருவிழா துவங்கியது. ஐந்தாம் நாளான நேற்று நாய் கண்காட்சி நடந்தது. இதில் 15 வகையான 65 நாய்கள் கலந்து கொண்டன. கண்காட்சியை கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குநர் நடராஜன் துவக்கி வைத்தார். நாய்களின் பல்வேறு திறமைகள் பரிசோதனை செய்யப்பட்டன.இதில் பாளை.,டாக்டர் ராய் வளர்ப்பு நாயான லேபர் டாய் கோல்டன் முதல் பரிசும், இடைகால் கார்த்திக் வளர்ப்பு நாய் இரண்டாம் பரிசும் பெற்றது. டாபர்மேன், பக், ஆஸ்திரேலியா பெர்ஷியன், பேக்டவுன், பொம்மேரியன், ஜெர்மன் சப்போட், பாக்ஸர், போடு வயிலாஸ் உள்ளிட்ட வகைகளிலும் முதல், இரண்டாம் பரிசு வழங்கப்பட்டது. இரவில் நடந்த விழாவில் நாய் உரிமையாளர்களுக்கு பரிசளிக்கப்பட்டது. நாய் கண்காட்சியில் பெர்சியா நாட்டின் இரண்டு அபூர்வ பூனைகளை பாளை., டாக்டர் ராய் கொண்டு வந்திருந்தார். இவை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்ததால் பூனைகளுக்கு சிறப்பு பரிசு அறிவிக்கப்பட்டது. போட்டியின் நடுவர்களாக கால்நடை பராமரிப்பு துறை துணை இயக்குநர் டாக்டர் எட்வீன், டாக்டர்கள் சந்தோஷ், முத்துக்குமார், மாரிமுத்து செயல்பட்டனர். நிகழ்ச்சியில் போலீஸ் துப்பறியும் நாய் சீஸர் பல்வேறு சாகசங்களை செய்து காட்டியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ