உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / செந்தூரில் காங்., நிர்வாகிகள் கூட்டம்

செந்தூரில் காங்., நிர்வாகிகள் கூட்டம்

திருச்செந்தூர்:திருச்செந்தூரில் காங்., மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்., தலைவர் ஜஸ்டின் தலைமை வகித்தார். திருச்செந்தூர் வட்டார காங்., தலைவர் தங்கமணி வரவேற்றார். திருச்செந்தூர் நகர காங்., தலைவர் குறிஞ்சி சுரேஷ் நன்றி கூறினார். அகில இந்திய காங்., கமிட்டி உறுப்பினர் ஏபிசிவி சண்முகம், முன்னாள் எம்பி., தொகுதி கன்வீனர் சந்திரசேகரன், தூத்துக்குடி எம்பி., தொகுதி இளைஞர் காங்., தலைவர் பெருமாள்சாமி, மாநில தொழிற்சங்க உறுப்பினர் ஆகியோர் கலந்து கொண்டனர். காங்., மாவட் டதுணை தலைவர்கள் மகேந்திரன், கருணாகரன், மாவட்ட செயலாளர் அரிகரன், ஐஎன்டியுசி மாவட்ட செயலாளர் யோகநாதன், மாநில சென்சார் போர்டு உறுப்பினர் ஜெயசேகர் மற்றும் கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் வரும் உள்ளாட்சித் தேர்தலில் காங்., தனித்து போட்டியிடுவது குறித்தும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை