உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / கடன் வழங்கும் முகாம்

கடன் வழங்கும் முகாம்

எட்டயபுரம்:எட்டயபுரம் பாண்டியன் கிராம பாங்க் சார்பில் குளத்துள்வாய்பட்டி, கசவன்குன்று ஆகிய கிராமங்களை சார்ந்த பால் உற்பத்தியாளர்களுக்கு கறவை மாடுகள் வாங்க ரூ.3 லட்சத்து 20 ஆயிரம் கடன் வழங்கப்பட்டது.கிராமப்புரங்களில் பால் உற்பத்தியை பெருக்குவதற்காக குளத்துள்வாய்பட்டி, கசவன்குன்று ஆகிய கிராமங்களிலுள்ள பால் உற்பத்தியாளர்களுக்கு கறவை மாடுகள் வாங்குவதற்காக 16 பயனாளிகளுக்கு தலா ரூ.20 ஆயிரம் வீதம் ரூ.3 லட்சத்து 20 ஆயிரம் கடன் தொகை வழங்கப்பட்டது. எட்டயபுரம் பாண்டியன் கிராம பாங்க் மேனேஜர் கார்த்திகேயன் பயனாளிகளுக்கு கடன் தொகை வழங்கி இதன் மூலம் உற்பத்தியை பெருக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார். பாங்க் அலுவலர் சிவகாமி மற்றும் பால் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை