உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / கார்கில் வெற்றி விழா

கார்கில் வெற்றி விழா

கோவில்பட்டி:கோவில்பட்டி அருகேயுள்ள இலுப்பையூரணி நேதாஜி விவேகானந்தா சேவா மையம் சார்பில் கார்கில் வெற்றி வீரவணக்க நாள் விழா கொண்டாடப்பட்டது.இலுப்பையூரணி அங்கன்வாடி மையத்தில் நடந்த விழாவிற்கு கோவில்பட்டி டி.எஸ்.பி.,சிலம்பரசன் தலைமை வகித்தார். இலுப்பையூரணி ஊர் கமிட்டி செயலாளர் கொம்பையா, மனித உரிமை கழக நெல்லை மண்டல இளைஞரணி ஒருங்கிணைப்பாளர் வெள்ளத்துரை, முதியோரணி சங்கரன், குருசாமி, புத்தையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நேதாஜி சேவா சங்க நிறுவனர் நாகராஜன் வரவேற்றார். தொடர்ந்து கோவில்பட்டி எம்எல்ஏ.,ராஜூ கலந்து கொண்டு கார்கில் போர் நினைவாக இந்திய வரைபடம் வடிவில் அமைக்கப்பட்ட 524 தீபங்களை ஏற்றினார். இதையடுத்து அனைத்து தீபங்களும் ஏற்றப்பட்டு கார்கில் போருக்கு 12ம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் நேதாஜி விவேகானந்தா சேவா சங்க மாணவரணி, மகளிரணி, இளைஞரணியினர் சார்பில் வீரஅஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து கார்கில் போரில் கலந்து கொண்ட இலுப்பையூரணி ராணுவவீரர்கள் அசோக்குமார், மந்திரசூடாமணி ஆகியோர் போர் அனுபவம் குறித்து பேசினர். நேருயுவகேந்திரா சேவை தொண்டர் துரைபாண்டி நன்றி கூறினார். ஏற்பாடுகளை மனிதஉரிமை கழக நெல்லைமண்டல இளைஞரணி, தூத்துக்குடி நேருயுவகேந்திரா இலுப்பையூரணி நேதாஜி விவேகானந்தா சேவா சங்க நிறுவனர் நாகராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை