உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / மோசமான நிலையில் இருந்த மின்வயரில் மின்கசிவுஆற்றில் மேய்ச்சலுக்கு சென்ற மாடுகள் பரிதாப சாவு

மோசமான நிலையில் இருந்த மின்வயரில் மின்கசிவுஆற்றில் மேய்ச்சலுக்கு சென்ற மாடுகள் பரிதாப சாவு

தூத்துக்குடி: தாமிரபரணி ஆற்று பகுதியில் சென்ற மின்வயரில் மின்கசிவு ஏற்பட்டு மேய்சலுக்கு சென்ற 4 மாடுகள் பரிதாபமாக உயிர் இழந்தது. தென்திருப்பேரை யாதவர் தெருவைச் சேர்ந்த ராமசாமி என்பவரது மகன் கிருஷ்ணன். இவர் சொந்தமாக மாடு வளர்ப்பதோடு பால் வியாபாரமும் செய்து வருகிறார். இவர் 27ம் தேதி மாலை தனக்கு சொந்தமான மாடு மற்றும் தனது அண்ணணுக்கு சொந்தமான மாடு என மொத்தம் 14 மாடுகளை தென்திருப்பேரை தாமிரபரணி ஆற்றில் மேய்சலுக்காக அழைத்து சென்றுள்ளார். மேய்ச்சல் முடிந்தவுடன் 14 மாடுகளையும் அழைத்துக் கொண்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது ஆற்றின் பள்ளமான இடத்தில் தேங்கியிருந்த தண்ணீரை குடிக்க சென்ற 4 மாடுகள் திடீரென துடிதுடித் சொத்து விழுந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணன் மற்ற மாடுகளை தண்ணீர் கிடந்த பள்ளம் அருகில் செல்லாமல் தடுத்து நிறுத்தினார். பின்னர் தண்ணீர் தேங்கியிருந்த பள்ளம் அருகே சென்று பார்த்த போது தமிரபரணி ஆற்றில் இருந்து சாயர்புரம், சிவத்தையாபுரம் மற்றும் பண்டாரவிளை பகுதிக்கு குடிநீர் செல்லும் ஆழ்துளை கிணற்று மோட்டார் மின்சார வயரில் இருந்து மின்கசிவு ஏற்பட்டு தண்ணீரில் கசிந்ததால் தான் மாடுகள் சொத்து விழுந்ததை கண்டுபிடித்தார். இந்த விபத்தில் சுமார் 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள உயர் வகை பால் மாடு ஒன்று, இரண்டு சினை மாடுகள் மற்றும் பெரிய கன்றுகுட்டி ஒன்றும் பரிதாபமாக இறந்து தண்ணீர் மிதந்தது. இதோடு மட்டுமல்லாது அந்த பள்ளத்தில் இருந்த நூற்றுக்கணக்கான மீன்களும் சொத்து மிதந்தது. இந்த சம்பவம் குறித்த ஏரல் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆற்றுபகுதியில் இதுபோ ன்று ஆபத்தான நிலையில் செல்லும் மின்வயர்களில் இருந்து பொதுமக்களையும், கால்நடைகளையும் காப்பாற்ற குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நடவடிக் கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி