உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / பனிமய மாதா கோவிலில் இன்றுமாலுமிகளுக்கான சிறப்பு திருப்பலி

பனிமய மாதா கோவிலில் இன்றுமாலுமிகளுக்கான சிறப்பு திருப்பலி

தூத்துக்குடி: பனிமய மாதா பேராலய பெருவிழாவில் இன்று கப்பல் மாலுமிகளுக்கான சிறப்புத் திருப்பலி நடக்கிறது.தூத்துக்குடி தூய பனிமய மாதா ஆலயத்தின் 429வது ஆண்டு பேராலயத் பெருவிழா கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி ஒவ்வொரு நாளும் பல்வேறு சிறப்பு திருப்பலியும், மறையுரையும் நடந்து வருகிறது. 4ம் நாள் விழாவாக நேற்று பாத்திமாநகர் பங்கு இறைமக்கள், இஞ்ஞாசியார்புரம் பங்கு இறைமக்கள், லசால் அருட்சகோதரர்கள், லசால் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், மீன்பிடி, உப்பு ஆலை, பனை தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டோர் உரிமை வாழ்வுக்கான சிறப்பு திருப்பலி நடந்தது. இன்று மாலை 5.30 மணிக்கு கப்பல் மாலுமிகளுக்கான சிறப்பு திருப்பலியும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்