உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / வெள்ளூர் ஸ்ரீ ஆழியங்கை பெருமாள் கோயில்கும்பாபிஷேக விழா கோலாகலம்

வெள்ளூர் ஸ்ரீ ஆழியங்கை பெருமாள் கோயில்கும்பாபிஷேக விழா கோலாகலம்

ஸ்ரீவைகுண்டம்:ஸ்ரீவைகுண்டம் அருகே வெள்ளூர் ஸ்ரீ ஆழியங்கை பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.விழாவில் ஆயிரக்கண க்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.ஸ்ரீவைகுண்டம் அருகே வெள்ளூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ ஆழியங்கை பெருமாள் கோயில் மிகவும் பழமையானது ஆகும். நூறு ஆண்டுகளுக்கு மேல் திருப்பணிகள் நடக்காமல் இருந்தது. இந்நி லையில் பல லட்சம் ரூபாய் செலவில் திருப்பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்து வந்தது. திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேக விழா கடந்த 31ம் தேதி துவங்கியது. 31ம் தேதி காலை தாமிரபரணி நதியில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து அனுக்ஞை, சங்கல்பம், விஸ்வக்சேனர் ஆராதனை, வாஸ்துபூஜை, பாலிகை பூஜை, அங்குரார்பணம், வேததிவ்ய பிரபந்தங்களுடன் துவங்கியது. 1ம் தேதி காலை ரஷாபந்தனம், கலாகர்ஷணம், பர்யக்னிகரணம், பஞ்சகவ்ய ப்ரோஷணம், மகாகும்பஸ்தாபனம், மண்டலபிரதிஷ்டை, ஆராதனம், அக்னி பிரதிஷ்டை, மனோன்மான் சாந்திஹோமம், யகோக்த ஹோமாதிகள் பூர்ணாகுதி, சாற்றுமுறை நடந்தது. மாலை கர்மாங்கஸ்த ஸ்நபன ஹோம் விமானங்களுக்கும் பரிவாரமூர்த்திகளுக்கும் திருமஞ்சனம் நடந்தது. பின்னர் சதுஸ்தானர்சனை மதிகள் திசாஹோமம், பூர்ணாகுதி, சாற்று முறையும், இரவு சயனாதிவாஸம் நடந்தது. கடந்த 2ம் தேதி காலை 6 மணிக்கு விஸ்வரூபதரிசனம் சதுஸ்தானார்ச்சனையும், ஹோமதிகள், மகாசாந்தி ஹோமம், 8 மணிக்கு மகாபூர்ணாகுதிதானாதிகள் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. தொடர்ந்து 8.15 மணிக்கு கும்பங்கள் யாகசாலையில் இரு ந்து புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத் தொ டர்ந்து 8.45 மணிக்கு மகாகும்பாபிஷேகம் பக்தர்களின் கோ விந்தா கோவிந்தா கோஷத்துடன் மேளதாள வாத்யங்கள் முழங்க நடந்தது. 9.15 மணிக்கு சாற்றுமுறை, கோஷ்டி நடந்தது. 12 மணிக்கு அன்னதானம் நடந்தது. விழாவில் இந்து சமயஅறநிலையத்துறை அமைச்சர் சண்முகநாதன் திருச்சி போலீஸ் கமிஷனர் மாசானமுத்து, மா நில தேர்தல் ஆணையர் சோ அய்யர், திருவண்ணாமலை பத்ம சுவாமிகள், ஆழ்வார் திருநகரி எம்பெருமானார், ஜீயர், ஸ்ரீவை., கோயில் ஸ்த லத்தார் வெங்கடாச்சாரி, திருநெல்வேலி மாவட்ட முதன் மை நீதிபதி விஜயராகவன், இந்து சமய அறநிலையதுறை கூடுதல் ஆணையர் சுப்பிரமணியன், கூடுதல் ஆணையர் திருப்பணிகள் தனபால், இø ண ஆணையர் திருமகள், திருநெல்வேலி இணை ஆணையர் புகழேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ.,தர்மலிங்கம், துணை ஆணையர் முத்து தியாகராஜன், உதவி ஆணையர் வீரராஜன், அறநிலையத்துறை கோட்ட பொறியாளர் முருகேசன், ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் வசந்தா, யூனியன் ஆணையர் வேல்மயில், உதவி பொறியாளர் அருணாசலம், பஞ்.,தலைவர் சண்முகசுந்தரி அலங்காரம், மருதூர் மேலக்கால் விவசாய சங் க தலைவர் அலங்காரம், தொ ழிலதிபர் காமாட்சிசந்திரன், மாவட்ட தீயணை ப்பு துறை அலுவலர் மனோகர், டி.வி. எஸ்.ஆலோசகர் முருகன், கே. ஜி.எஸ்.செயலர் சண்முகநாதன், முன்னாள் தக்கார் சுப்பையா, ராமன், கோ பால், நடராஜன், சொர்ணபாண்டியன், நகர தேமுதிக., செயலாளர் சின்னபாண்டி, காண்ட்ராக்டர் கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கோயில் திருப்பணி மற்றும் கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை திருச்சி போலீஸ் கமிஷனர் மாசானமுத்து தலைமையில் அறங்காவல் குழுத்தலைவர் பூசப்பாண்டி, தக்கார் ராமசுப்பிரமணியன் திருப்பணிக்குழு தலைவர் இலங்காமணி, திருப்பணிகுழு உறுப்பினர்கள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை