உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / காயல்பட்டணம் பகுதியில் தெருநாய்களைஅப்புறப்படுத்த கோரிக்கை

காயல்பட்டணம் பகுதியில் தெருநாய்களைஅப்புறப்படுத்த கோரிக்கை

காயல்பட்டணம்: காயல்பட்டணம் பகுதிகளில் சுற்றித்திரியும் தெரு நாய்களை நகராட்சி மற்றும் சுகாதாரத்துறையினர் அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.காயல்பட்டண பகுதிகளில் தெருநாய் தொல்லை அதிகளவில் உள்ளது. இரவு நேரங்களில் தெருக்களில் நாய்கள் சண்டையிடுவதும் தெருக்களில் அலைந்து திரிவதால் பொதுமக்கள் வேதனைக்குள்ளாகின்றனர். பள்ளி மாணவ, மாணவிகள் இரவு நேரங்களில் தெருவில் வர அஞ்சுகின்றனர். அது மட்மல்லாமல் ஆடு, மாடு போன்ற விலங்குகளை கடித்து வருகிறது. மேலும் நோய் உள்ள நாய்கள் தெருவில் அலைகின்றது. இதனால் பொதுமக்களுக்கு நோய்பரவும் நிலை ஏற்படுகிறது. ஆகவே இது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை