| ADDED : செப் 21, 2011 01:04 AM
எட்டயபுரம்:எட்டயபுரம் பாரதி முற்போக்கு வாலிபர் சங்கம் பொன்விழா ஆண்டு
மகாகவி பாரதி விழா நடந்தது.முதல்நாள் எட்டயபுரம் பாரதியார் பிறந்த
இல்லத்திலிருந்து முன்னாள் எம்எல்ஏ.,ராஜேந்திரன் தலைமையில் பாரதி அன்பர்கள்
முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலம் சென்று பாரதி மணிமண்டபத்தில் பேராசிரியை
ராஜேஸ்வரி பாரதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். கோவில்பட்டி
மாரியப்பன் குழுவினரின் நாதஸ்வரம் மங்களஇசை கச்சேரி நடந்தது. பொன்னீலன்
விழாவிற்கு தலைமை வகித்தார். சங்க தலைவர் வெங்கடேஸ்ராஜா வரவேற்றார்.
தவத்திருகுன்றக்குடி பொன்னம்பல அடிகளார் துவக்கி வைத்து பேசினார். இலங்கை
தமிழ் அறிஞர் சிவத்தம்பி படத்தினை அரசு திறந்து வைத்தார்.பொன்னீலன் பல்வேறு
போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளிக்குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
இரண்டாம் நாள் விழா விற்கு முத்துமோகன் தலைமை வகித்தார். காசிவிஸ்வநாதன்
வரவேற்றார். இருபதாம் நூற்றாண்டின் தமிழ் சமூக அசைவுகளில் சில
நிகழ்வுகளும், போக்குகளும் விவசாயிகளின் எழுச்சி பற்றி நல்லகண்ணு பேசினார்.
பாரதி பாடல்களுக்கு தடையும், நீக்கலும் பற்றி ஆனந்குமார் மற்றும்
ஹமீம்முஸ்தபா ஆகியோர் பேசினர். காமராசு கவிதாஞ்சலி செலுத்தினார். தமிழ்நாடு
கலை இலக்கிய பெருமன்றமும், நியூ செஞ்சுரி புத்தக நிறுவனமும் இணைந்து 2011
சிறந்த நூல்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. தொடர்ந்து வாஞ்சிநாதன்
புகைப்பட கண்காட்சி நடந்தது.வீரப்பட்டி கணேசன் குழு முரசு கலைகுழுமம்
நாட்டுப்புற நடனங்கள் சங்கர்குமார் தலைமையில் கைலாசமூர்த்தி கிராமிய இசை
தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையம் பாவைகூத்து கல்லூரி மாணவ, மாணவியர்
பாட்டு நாட்டியம், கலைநிகழ்ச்சி நடந்தது. சங்க செயலாளர் முருகேஷ் நன்றி
கூறினார்.