உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / நுகர்வோர் விழிப்புணர்வு முகாம்

நுகர்வோர் விழிப்புணர்வு முகாம்

தூத்துக்குடி: தூத்துக்குடி புனித அலாய்சியஸ் மேல்நிலைப்பள்ளியில் நுகர்வோர் விழிப்புணர்வு முகாம் நடந்தது.முகாமிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியை ராஜரீகமேரி, உதவித்தலைமை ஆசிரியை எமரென்னியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் ஜெயந்தி வரவேற்றார். மாவட்ட நுகர்வோர் மன்ற செயல்திட்ட இயக்குனர் சங்கர் தலைமை வகித்து பேசினார். நுகர்வோர் விழிப்புணர்வு சம்பந்தப்பட்ட சொற்பொழிவு, கவிதை மற்றும் நாடகங்களை மாணவிகள் நடத்தினர். மாணவர் தலைவி தங்கலட்சுமி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ