உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / இலவச கண்சிகிச்சை முகாம்

இலவச கண்சிகிச்சை முகாம்

தூத்துக்குடி: கோவில்பட்டி ஜிவிஎன் கல்லூரியின் நலவாழ்வு மையம், என்.எஸ்.எஸ், கே.ஆர்.வித்யாஷ்ரம் மற்றும் நெல்லை அரவிந்த் கண் ஆஸ்பத்திரி சார்பில் இளையரசனேந்தலில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.முகாமை கல்லூரியின் செயலர் செல்வராஜ், வசுந்தரா செல்வராஜ் ஆகியோர் துவக்கிவைத்தனர். கல்லூரி பேராசிரியர் திருவேங்கடராஜ் முன்னிலை வகித்தார். முகாமில் பொதுமக்களுக்கு கண் விழித்திரை பரிசோதனை, கண்புரை, கண் அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. நெல்லை அரவிந்த் கண் ஆஸ்பத்திரி டாக்டர்கள் சிகிச்சையளித்தனர். முகாமிற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் நலவாழ்வு மைய ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஆதிலட்சுமி மற்றும் என்எஸ்எஸ் திட்ட அதிகாரிகள் ராமமூர்த்தி, சுகந்திஞானம்மாள் ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை