மேலும் செய்திகள்
விபத்தில் 2 வாலிபர்கள் இறப்பு
04-Oct-2025
குலசையில் தசரா விழா கோலாகலம்
03-Oct-2025
சென்னை போலீஸ்காரர் கோவில்பட்டியில் தற்கொலை
03-Oct-2025
மாஜி போலீஸ்காரருக்கு சிறை
28-Sep-2025
கப்பலில் இருந்து விழுந்தவர் பலி
27-Sep-2025
தூத்துக்குடி: தூத்துக்குடி கலெக்டர் அலுவலக மேலாளர் பரமசிவன் பதவி உயர்வு பெற்று நெல்லை நதிநீர் இணைப்பு திட்ட துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழகத்தில் தாசில்தார்கள் பலருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு துணை ஆட்சியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பணியிடம் காலியாக, காலியாக பணியிடம் வழங்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி கலெக்டர் அலுவலக மேலாளர் (பொது) பரமசிவன், குற்றவியல் மேலாளர் பூமி ஆகியோரும் துணை ஆட்சியர்களாக பதவி உயர்வு பெற்றனர். ஆனால் பணியிடம் எதுவும் காலியாக இல்லாததால் அவர்களுக்கு பணியிடம் வழங்கப்படாமல் இருந்தது. தற்போது இவர்களுக்கு பணியிடம் ஒதுக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பரமசிவன் நெல்லை தாமிரபரணி ஆறு, கருமேனிஆறு, நம்பியாறு நதிநீர் இணைப்பு நில ஆர்ஜித திட்ட துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். பூமி விருதுநகர் மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர்கள் விரைவில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியிடத்தில் துணை ஆட்சியர்களாக பொறுப்பேற்பார்கள் என்று கலெக்டர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.
04-Oct-2025
03-Oct-2025
03-Oct-2025
28-Sep-2025
27-Sep-2025