உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / இன்று முறப்பநாட்டில் விதைக்கிராம திட்ட பயிற்சி

இன்று முறப்பநாட்டில் விதைக்கிராம திட்ட பயிற்சி

செய்துங்கநல்லூர்: முறப்பநாட்டில் இன்று (21ம் தேதி) விதைக் கிராம திட்ட பயிற்சி நடக்கிறது.கருங்குளம் யூனியன் முறப்பநாடு புதுக்கிராமம் பஞ்.,சில் நெல் பயிருக்கான விதைக் கிராம திட்ட பயிற்சி 3 நாட்கள் நடக்கிறது. இன்று காலை 10 மணிக்கு துவங்கும் இப்பயிற்சியில் முதல் நிகழ்ச்சியாக கருங்குளம் வேளாண்மை உதவி இயக்குனர் கிருஷ்ணப்பிள்ளை வரவேற்று பேசுகிறார். பஞ்., தலைவர் சேகர் பேசுகிறார். தூத்துக்குடி வேளாண்மை இணை இயக்குனர் ரஞ்சித்சிங் தனராஜ் தலைமை வகித்து பேசுகிறார். மதியம் 2 மணிக்கு பிரம்மநாயகம் பயிற்சி கொடுக்கிறார். மறுநாள் காலை 10 மணிக்கு தரமான விதைகளே மகசூலுக்கு அடிப்படை என்ற தலைப்பில் தூத்துக்குடி வேளாண்மை துணை இயக்குனர் சீனிவாசன் பயிற்சி கொடுக்கிறார். அதனைத் தொடர்ந்து விதை சேமிப்பு முறைகள் குறித்து தூத்துக்குடி வேளாண்மை அலுவலர் மார்டின்ராணி பயிற்சி கொடுக்கிறார். கருங்குளம் உதவி விதை அலுவலர் முருகேசன் நெல் விதைப் பண்ணையில் நேரடிப் பயிற்சி கொடுக்கிறார். கடைசி நாள் காலை 10 மணிக்கு கயத்தார் விதைச் சான்று அலுவலர் பென்காம் உயர் மகசூல் நுட்பங்கள் குறித்து பயிற்சி கொடுக்கிறார். நுண்ணூட்ட உரங்கள் குறித்து தூத்துக்குடி வேளாண்மை உதவி இயக்குனர் குருமூர்த்தி பயிற்சி அளிக்கிறார். மதியம் 2 மணிக்கு கருங்குளம் வேளாண்மை அலுவலர் அஜ்மல்கான் செயல்முறை விளக்கம் அளிக்கிறார். உதவி வேளாண்மை அலுவலர் கந்தசாமி நன்றி கூறுகிறார். ஏற்பாடுகளை கருங்குளம் உதவி இயக்குனர் கிருஷ்ணப்பிள்ளை ஆலோசனையில் வேளாண்மை அலுவலர் அஜ்மல்கான் செய்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை