உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / ஸ்ரீவை.,யில் ஊட்டச்சத்து வாரவிழா

ஸ்ரீவை.,யில் ஊட்டச்சத்து வாரவிழா

ஸ்ரீவைகுண்டம்:ஸ்ரீவைகுண்டத்தில் ஊட்டச்சத்து வாரவிழா நடந்தது. பேட்துரைச்சாமி புரம், நளராஜபுரம் ஆகிய பகுதிகளில் நடந்த விழாவுக்கு நளராஜபுரம் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜார்லின்குயிஸ் மெல்லி தலைமைவகித்தார்.விழாவில் ஊட்டச்சத்து க்கள் அடங்கிய காய்கறி கள், கீரைகள், பழங்கள், தானிய வகைகள், பருப்பு வகைகள், முன்பருவக் கல்வி உபகரணங்கள் கண்காட்சியாக வைக்கப் பட்டிருந்தது. இந்நிகழ்ச் சியில் வட்டார குழந்தை வளர்ச்சித்திட்ட அலுவலர், மேற்பார்வையாளர்கள், பள்ளி ஆசிரியர்கள், கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், வளர்இளம்பெண்கள் கலந்துகொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை அங்கன்வாடி பணியாளர்கள் சீதா லெட்சுமி, முத்துகுமாரி ஆகியோர் செய்திருந்தனர்-. மேற்பார்வையாளர் ஜெயலெட்சுமி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை