உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / ரயில்வே சுரங்கப் பாதையைசீரமைக்க கோரி ஆர்ப்பாட்டம்

ரயில்வே சுரங்கப் பாதையைசீரமைக்க கோரி ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி:கோவில்பட்டி கிருஷ்ணா நகர் ரயில்வே சுரங்கப் பாதையை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க கோரி பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.கோவில்பட்டி ரயில்வே ஸ்டேசனில் கிருஷ்ணா நகர் சுரங்கப் பாதையை சீரமைக்கக் கோரி நடந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு முனியப்பன் தலைமை வகித்தார். பிச்சையா முன்னிலை வகித்தார். கிருஷ்ணமூர்த்தி ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார். கோவில்பட்டி கிருஷ்ணாநகர் பகுதியில் மந்தித்தோப்பு செல்லும் ரோட்டில் உள்ள ரயில்வே கேட்டை சுரங்கப் பாதையாக மாற்றுவதற்கு பல மாதங்களுக்கு முன்பே பணிகள் துவங்கப்பட்டு முடிவடையாமல் கிடப்பில் போட்டுள்ளதை விரைந்து முடிக்கவும், கிருஷ்ணாநகர் சுரங்கப் பாதையை ஏற்கெனவே இருந்த ரயில்வே கேட்டின் அமைப்பில் போடாமல் எதிரும், புதிருமாக எதிரே வரும் வாகனங்கள் தெரியா வண்ணம் விபத்துக்கள் ஏற்படும் வகையில் உள்ளதை சரி செய்யவும், இருபுறமும் உயரமாகவும் சுரங்கப்பாதை ஆழமாக இருப்பதால் மழைக்காலத்தில் வெள்ளநீர் தேங்கும் அபாயம் உள்ளதால் அதை போர்க்கால அடிப்படையில் சரி செய்யவும், இரவு நேரத்தில் கும்மிருட்டாக உள்ளதால் விளக்குகள் அமைக்கவும் கோரி முருகேசன், நாராயணன், கனகராஜ் மற்றும் நீலமேகன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ