மேலும் செய்திகள்
மாணவியிடம் சில்மிஷம் பாதிரியார் மீது போக்சோ
25-Nov-2025
துாத்துக்குடி: தேசிய பசுமை இழுவை படகு மாற்ற திட்டத்தின் ஒரு பகுதியாக, அதிநவீன பசுமை இழுவை படகு சேவையை அறிமுகப்படுத்த, துாத்துக்குடி துறைமுகம் முடிவெடுத்துள்ளது. 'நாலேஜ் மரைன் அண்டு இன்ஜினியரிங் ஒர்க்ஸ் லிமிடெட்' என்ற நிறுவனத்திற்கு, இரண்டு இழுவை படகு வழங்க 385 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் வழங்கியுள்ளது. படகுகள், 15 ஆண்டு களுக்கான செயல்பாடு மற்றும் பராமரிப்பு சேவைகளை உள்ளடக்கியதாக இந்த ஒப்பந்தம் இருக்கும். இது குறித்து துறைமுக ஆணைய தலைவர் சுசாந்த குமார் புரோஹித் கூறியதாவது: நாட்டில் உள்ள முக்கிய துறைமுகங்களில், டீசல் மூலம் இயங்கும் இழுவை படகுகளை படிப்படியாக நீக்கி, அவற்றை மின்சாரம், அம்மோனியா, ஹைட்ரஜன் மூலம் இயக்கப்படும் பசுமை இழுவை படகுகளாக மாற்றுவதை நோக்கமாக கொண்டு, இந்த முயற்சி செய்யப்பட் டு வருகிறது. மின்சார இழுவை படகுகளை பயன்படுத்துதல், கார்பன் உமிழ்வை குறிப்பிடத்தக்க அளவில் குறைக்கும். முழுமையான மின்சார இழுவை படகுகள், 100 சதவீதம் வரை உமிழ்வை குறைக்கக்கூடியவை. தற்போது, துறைமுகத்தில் டீசல் மூலம் இயங்கக்கூடிய, 45 டன் திறன் கொண்ட ஒரு படகும், 50 டன் திறன் கொண்ட இரண்டு இழுவை படகுகளும் இயக்கப்பட்டு வருகிறது. துறைமுக செயல்பாடுகளில் சுத்தமான ஆற்றல் பயணத்தை முன்னேற்றுவதன் மூலம், வ.உ.சி., துறைமுகம் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கும், பசுமை கடல்சார் வளர்ச்சிக்கும் தன் உறுதியை வலியுறுத்துகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
25-Nov-2025