உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பத்தூர் / ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 13 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 13 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

திருப்பத்துார்:திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அடுத்த உடையராஜபாளையம் கிராமம் அருகே, ஆம்பூர் தாலுகா போலீசார் நேற்று காலை வாகன சோதனை நடத்தினர்.அவ்வழியாக வந்த லாரியை சோதனை செய்தனர். அதில், 13 டன் ரேஷன் அரிசி இருப்பது தெரிந்தது.லாரி டிரைவர் பிரதீப்குமார், 43, என்பவரை பிடித்து விசாரணை செய்ததில், குடியாத்தத்தைச் சேர்ந்த கணேசன் என்பவருக்கு சொந்தமான லாரியில், ஆந்திராவிற்கு ரேஷன் அரிசி கடத்திச் சென்று கொண்டிருந்தது தெரிந்தது.லாரியுடன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், டிரைவர் பிரதீப்குமாரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ