உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பத்தூர் / பானி பூரி வியாபாரி வீட்டில் 30 சவரன் நகை திருட்டு

பானி பூரி வியாபாரி வீட்டில் 30 சவரன் நகை திருட்டு

ஜோலார்பேட்டை:திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே, ஆண்டியப்பனுார் அடுத்த ராஜபாளையத்தை சேர்ந்தவர் தென்னரசு, 37; இவர் குடும்பத்துடன் புதுச்சேரியில் தங்கி, பானிப்பூரி கடை நடத்தி வருகிறார். அவ்வப்போது தன் சொந்த ஊருக்கு வந்து செல்வது வழக்கம். கடந்த வாரம் குடும்பத்துடன் சொந்த ஊர் வந்தவர் கடந்த, 2 நாட்களுக்கு முன்பு புதுச்சேரி திரும்பினார். ராஜபாளையத்திலுள்ள இவரது வீட்டை பராமரித்து வரும், அதே பகுதியில் வசிக்கும் அவரது சகோதரர் அர்ஜுனன், நேற்று காலை அங்கு சென்று பார்த்தார். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே, 30 சவரன் நகை, அரை கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது. குரிசிலாப்பட்டு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை