உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பத்தூர் / சடலத்தை 7 கி.மீ., டோலி கட்டி துாக்கி சென்ற அவலம்

சடலத்தை 7 கி.மீ., டோலி கட்டி துாக்கி சென்ற அவலம்

வாணியம்பாடி:திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த நெக்னாமலையில், 900 பேர் வசிக்கின்றனர். இந்த கிராமத்தை சேர்ந்த விவசாயி முத்து நாயக்கர், 82, சில மாதங்களாக உடல் நலம் பாதித்து அவதிப்பட்டு வந்தார். கடந்த மாதம் வேலுார் கழிஞ்சூரில் உள்ள தன் மகள் வீட்டில் தங்கி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார். அவரது உடல், சொந்த ஊரான நெக்னாமலைக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டு, வேலுாரில் இருந்து ஆம்புலன்ஸ் வாயிலாக கொண்டு சென்றனர். சாலை குண்டும், குழியுமாக இருந்ததால், ஆம்புலன்ஸ் மலை அடிவாரம் வரை மட்டுமே சென்றது. அவரது உடலை டோலி கட்டி, 7 கி.மீ., துாரம் துாக்கி சென்று, நேற்று அடக்கம் செய்தனர்.அவசர காலங்களில் கர்ப்பிணியரை பிரசவத்திற்கும், பாம்புக்கடியால் பாதிக்கப்படுபவர்களையும், மருத்துவமனைக்கு கொண்டு செல்வதில் இப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர். குண்டும், குழியுமாக உள்ள மண் சாலையை சீரமைக்க பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை