| ADDED : ஜூன் 06, 2024 10:27 PM
திருப்பத்துார்:திருப்பத்துார் அருகே, ரோடு டிவைடரில் லாரி மோதி கவிழ்ந்த விபத்தில் டிரைவர் பலியானார். திருப்பத்துார் மாவட்டம், சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் அருகே, வேலுாரிலிருந்து கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி நோக்கி சென்று கொண்டிருந்த லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவே உள்ள டிவைடர் மற்றும் மின்கம்பத்தின் மீது மோதி தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில், லாரி முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இடிபாடுகளுக்குள் சிக்கிய லாரி டிரைவர் சூளகிரியை சேர்ந்த சாதிக், 35, என்பவரை போலீசார், ஆம்புலன்ஸ் ஊழியர்கள், உயிரிழந்த நிலையில் மீட்டனர்.ஆம்பூர் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.