உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பத்தூர் / நாய் குறுக்கே வந்ததால் திடீர் பிரேக் லாரி டயர் வெடித்து கவிழ்ந்து விபத்து

நாய் குறுக்கே வந்ததால் திடீர் பிரேக் லாரி டயர் வெடித்து கவிழ்ந்து விபத்து

திருப்பத்துார்:திருப்பத்துார் அருகே, தேசிய நெடுஞ்சாலையில், திடீரென நாய் குறுக்கே வந்ததில், லாரி டிரைவர் திடீர் பிரேக் போட்டதில், டயர் வெடித்து லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மஹாராஷ்டிரா மாநிலத்திலிருந்து, சென்னை நோக்கி பிளாஸ்டிக் பொருட்களை ஏற்றிய லாரி, சென்னை நோக்கி நேற்று முன்தினம் இரவு, 10:00 மணியளவில் வந்தது. லாரியை டிரைவர் கமலாக்கர், 43, என்பவர் ஓட்டினார்.திருப்பத்துார் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரி சென்றபோது, திடீரென நாய் ஒன்று குறுக்கே வந்ததால், டிரைவர் திடீர் பிரேக் போட்டதில், டயர் வெடித்து நிலை தடுமாறி லாரி சாலையில் கவிழ்ந்தது. நாட்றம்பள்ளி போலீசார் சம்பவ இடம் சென்று, விபத்தில் சிக்கிய லாரி டிரைவரை மீட்டனர். இந்த விபத்தால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நாட்றம்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை