உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பத்தூர் / மனைவி, மகன் கண்ணெதிரே பஸ் மோதி தொழிலாளி பலி

மனைவி, மகன் கண்ணெதிரே பஸ் மோதி தொழிலாளி பலி

திருப்பத்துார்:திருப்பத்துார் அருகே, பைக் மீது தனியார் பஸ் மோதியதில், மனைவி, மகன் கண்ணெதிரே தொழிலாளி பலியானார்.திருப்பத்துார் மாவட்டம், ஆலங்காயத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி சரவணன், 27; இவரது மனைவி காயத்ரி, 23; இவர்களது ஒரு வயது மகன் ஸ்டீபன்; நேற்று முன்தினம் இரவு மனைவி, மகனை அழைத்துக்கொண்டு ஹோண்டா பைக்கில், ஹெல்மெட் அணியாமல், ஆசனம்பட்டு நோக்கி சரவணன் சென்றார். அப்போது ஒடுகத்துாரிலிருந்து ஆலங்காயம் நோக்கி வந்த, அண்ணாமலையார் என்ற தனியார் பஸ், தீர்த்தம் பகுதியில் பைக் மீது மோதியதில், சரவணன் சம்பவ இடத்திலேயே பலியானார். மனைவி காயத்ரி, மகன் ஸ்டீபன் படுகாயங்களுடன், வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்து குறித்து, ஆலங்காயம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை