| ADDED : ஜன 05, 2024 12:13 AM
திருப்பத்துார்:வேலுார், திருப்பத்துார், திருவண்ணாமலை மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில், 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்ற வதந்தியால், கடை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும், 10 ரூபாய் நாணயத்தை மக்கள் வாங்குவதில்லை. பொதுமக்களும் பயன்படுத்தாததால், 4 மாவட்ட மக்களிடமும், 10 ரூபாய் நாணயத்தை காண்பது அரிதாகி விட்டது.இந்நிலையில், திருப்பத்துார் மாவட்டம், புதுப்பேட்டை சாலையிலுள்ள ஒரு தனியார் ரெடிமேட் கடையில், கடந்த 3 நாட்களாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 10 ரூபாய் நாணயங்கள், 5 வழங்கினால், ஒரு புதிய, டி - ஷர்ட் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.இந்த தகவல் சுற்று வட்டார கிராமங்களில் காட்டுத்தீ போல பரவியது. இதனால், பொதுமக்கள் தங்கள் வீடுகளில் பயன்படுத்தாமல் வைத்திருந்த நாணயங்களை தேடி கண்டுபிடித்து எடுத்து கடையில் குவிந்தனர்.ஒரு கி.மீ.,க்கு நீண்ட வரிசையில் நின்று, நாணயங்களை கொடுத்துவிட்டு, டி - ஷர்ட்' வாங்கிச்சென்றனர்.