உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பத்தூர் / தோல் தொழிற்சாலை தொட்டியில் தவறி விழுந்த தொழிலாளி பலி

தோல் தொழிற்சாலை தொட்டியில் தவறி விழுந்த தொழிலாளி பலி

திருப்பத்துார்:திருப்பத்துார் அருகே, தோல் தொழிற்சாலை தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த தொழிலாளி பலியானார்.திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் புதுமனையை சேர்ந்தவர் வினோத்குமார், 50. இவர், கச்சேரி சாலையிலுள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். கடந்த, 30 ல் வழக்கம்போல் வேலைக்கு சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை, குடும்பத்தினர் தேடி வந்தனர். நேற்று காலை கச்சேரி சாலையில் மற்றொரு தோல் தொழிற்சாலைக்கு சொந்தமான தண்ணீர் தொட்டியில், குப்புசாமி சடலமாக கிடந்தார். வாணியம்பாடி டவுன் போலீசார், குப்புசாமி உடலை மீட்டு விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை