உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பத்தூர் / திருவிழாவில் காளை முட்டி காயமடைந்த வாலிபர் சாவு

திருவிழாவில் காளை முட்டி காயமடைந்த வாலிபர் சாவு

திருப்பத்துார் : திருப்பத்துார் மாவட்டம், பெருமாபட்டு கிராமத்தில் கடந்த, 27 ம் தேதி, பொங்கல் பண்டிகையையொட்டி காளை விடும் விழா நடந்தது. இதில், 300க்கும் மேற்பட்ட காளைகள் ஓடின. அப்போது, விழாவை வேடிக்கை பார்த்த மக்கள் கூட்டத்தில், ஒரு காளை புகுந்ததில், 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில், ஆலங்காயம் அடுத்த பூங்குளத்தை சேர்ந்த கேசவன், 23, என்பவர், திருப்பத்துார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின் மேல் சிகிச்சைக்காக, வேலுார் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். குரிசிலாப்பட்டு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை